"Shine Healthcare Hackathon 2025" என்ற இணையதளத்தினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
The Forecast 10 months ago தமிழ்நாடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை கிண்டியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் (ம) புத்தாக்க இயக்கம் (StartupTN) சார்பில் "Shine Healthcare Hackathon-2025" என்ற இணையதளத்தினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் மரு.கி.நாராயணசாமி, தமிழ்நாடு புத்தொழில் (ம) புத்தாக்க இயக்கத்தின் துணை தலைவர் சிவகுமார் பழனிசாமி. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மரு.க. சிவசங்கீதா, Aakam360 நிறுவனத்தின் தலைவர் திருமுர்த்தி ஆறுமுகம், மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments