Loading . . .




முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு நேரில் சந்தித்து பேசினார்கள்

The Forecast 10 months ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கிட தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அசோக் வர்தன் ஷெட்டி, இ.ஆ.ப., (ஓய்வு), தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு. நாகநாதன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

இச்சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News