தொழிலாளர்களை தேடி பணியிடம் சார்ந்த தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்படும் முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
The Forecast 10 months ago தமிழ்நாடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, கிண்டி, திரு.வி.க.நகர் தொழிற்பேட்டையில், சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் தொழிலாளர்களை தேடி பணியிடம் சார்ந்த தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்படும் முகாமினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அமீத், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், மண்டலக்குழுத் தலைவர் துரைராஜ், நகர நல அலுவலர் மரு.ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர் மோகன்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments