Loading . . .




தமிழ்நாடு முதலமைச்சரின் சேலம் வருகையையொட்டி, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்

The Forecast 10 months ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சரின் சேலம் வருகையையொட்டி, விழா நடைபெறும் சேலம் மாவட்டம், இரும்பாலை, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மா. இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். 

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News