Loading . . .




தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தமிழ்நாடு 2025 போட்டியின் அதிகாரப்பூர்வ இலட்சினையை (Logo) வெளியிட்டார்

The Forecast 10 months ago தமிழ்நாடு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தமிழ்நாடு 2025 போட்டியின் அதிகாரப்பூர்வ இலட்சினையை (Logo) வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தமிழ்நாடு 2025 போட்டி நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா,இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி,இ.ஆ.ப., பீகார் மாநில விளையாட்டு ஆணைய தலைமை செயல் அலுவலர் ரவீந்தரன் சங்கரன், இ.கா.ப., ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலா நாத் சிங், பொருளாளர்  சேகர் ஜெ.மனோகரன், இயக்குநர் (பொது) கமாண்டர்  ஆர்.கே.ஸ்ரீவத்சவா உள்பட அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News