சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துக்கல்லூரியின் 2025 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
The Forecast 10 months ago தமிழ்நாடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வெள்ளிவிழா கூட்டரங்கில், சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துக்கல்லூரியின் 2025 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கி விழா பேரூரையாற்றினார்.
இவ்விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் மரு.நாராயணசாமி, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.லியோ டேவிட், சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மரு.பார்த்தசாரதி, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் மரு.செந்தில்குமாரி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பாஸ்கர், இராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஆயிஷா ஷாஹீன், நிலைய மருத்துவ அலுவலர் மரு.வாணி மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவ மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments