Loading . . .




தமிழக அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

The Forecast 10 months ago தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, எழும்பூர், தாளமுத்து - நடராசன் மாளிகையில் உள்ள சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் தலைமை அலுவலகத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் "நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் இது பல்லாண்டு" நான்காண்டு சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார். 

இந்நிகழ்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம். இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News