38 வது தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு அணிகள் பதக்கம் வென்றதற்காக 4 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
The Forecast 10 months ago தமிழ்நாடு
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உத்தரகண்ட் மாநிலத்தில் 38 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் இறகுப் பந்து கலப்பு இரட்டையர் போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வென்றது. தமிழ்நாடு பெண்கள் கூடைப்பந்து அணி தங்கப் பதக்கமும், தமிழ்நாடு ஆடவர் கூடைப்பந்து அணி வெள்ளிப் பதக்கமும் வென்றன.
நேற்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அணி பதக்கம் வென்றதற்காக இறகுப்பந்து வீராங்கனை ஆத்ய வரியாத் அவர்களுக்கு 3.75 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், கூடைப்பந்து வீராங்கனை லோபமுத்ரா திம்மையா அவர்களுக்கு 2.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், கூடைப்பந்து வீரர்கள் பிரணவ் பிரின்ஸ், பிரசாந்த் சிங் ராவத் ஆகியோருக்கு தலா 1.50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும் என மொத்தம் 9.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை ஊக்க தொகையாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments