Loading . . .




இந்தியாவில் விரைவில் கால் பதிக்கும் சீனாவின் BYD..!

The Forecast 7 months ago வணிக செய்திகள்

சீனாவின் மின்சார வாகன உற்பத்தியாளர் BYD நிறுவனம், இந்தியாவில் தனது EV உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனுடன், குறைந்த விலையில் புதிய ரக மின்சார SUV கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2023-ஆம் ஆண்டிலேயே உற்பத்தி ஆலையை அமைக்க மத்திய அரசிடம் நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. ஆனால், அப்போது இந்தியா-சீனா இடையேயான உறவில் ஏற்பட்ட விரிசலால் அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது அந்த முயற்சி மீண்டும் தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், BYD இந்திய சந்தையில் வலுவான போட்டியாளராக களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் டெஸ்லா, டாடா, மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு கடும் போட்டி உருவாகும் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 Comments

Post your comment here

வணிக செய்திகள் Relateted News