Loading . . .




50% வரிவிதிப்பில் தளர்வு வருமா? – நாளை இந்தியா-அமெரிக்கா பேச்சுவார்த்தை

Janani G 7 months ago தேசிய செய்திகள்

அமெரிக்கா விதித்துள்ள 50% வரிவிதிப்பு, இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் மொத்த வர்த்தகத்தையும் பெரிதும் பாதித்துள்ளது. இதுகுறித்து சமீபத்தில் அமெரிக்க  ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “இந்தியாவுடன் தொடர்ந்து வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் தலைமை பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் பிரெண்டன் லின்ச் இந்தியா வர உள்ளார். அவரின் வருகையையடுத்து இந்தியா – அமெரிக்கா இடையே முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த சந்திப்பில், இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு, முதலீட்டு வாய்ப்புகள், ஏற்றுமதி-இறக்குமதி வளர்ச்சி உள்ளிட்டவை விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக, 50% வரிவிதிப்பை குறைப்பது பற்றியும் விரிவாக பேச்சு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சாதகமாக முடிந்தால், இந்தியாவின் ஏற்றுமதி துறைக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News