தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 19 வரை கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இன்று திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை மறுநாள் செப்டம்பர் 17-ஆம் தேதி ராணிப்பேட்டை உட்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, சென்னையில் இரண்டு நாட்கள் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments