உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் இன்று பதவியேற்கிறார்
The Forecast 4 months ago தேசிய செய்திகள்
உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் இன்று பதவியேற்கிறார். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நீதிபதி சூர்ய காந்த் அவர்களுக்கு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
1962 பிப்ரவரி 10 அன்று ஹரியானா மாநிலம் ஹிசாரில் பிறந்த சூர்ய காந்த், ரோத்தக் மற்றும் குருக்ஷேத்திரா பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பை முடித்தார். 1984ஆம் ஆண்டு ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர், ஹரியானா அத்வகேட் ஜெனரல், பின்னர் பஞ்சாப்–ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட பொறுப்புகளில் பணியாற்றினார். 2018ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேச தலைமை நீதிபதியாகவும், 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் உயர்ந்தார்.
சுமார் 1,000 வழக்குகளில் தீர்ப்பளித்துள்ள அவர், 370ஆம் பிரிவு, பெகாசஸ், பீகார் எஸ்ஐஆர் போன்ற பல முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கியவர். நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பதே தனது முக்கிய இலக்காக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
0 Comments