Loading . . .




செலவுகளை குறைக்க வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவு

Janani G 12 hours ago தேசிய செய்திகள்

நாட்டின் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செலவுகளை குறைத்து செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், முக்கிய ஆலோசனை கூட்டங்களை இணையவழி மூலம் நடத்த வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அன்றாட நிர்வாக செலவுகளை குறைத்து வளங்களை சிக்கனமாக பயன்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

இதனுடன் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு பதிலாக படிப்படியாக மின்சார வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்த நடவடிக்கை எரிபொருள் செலவை குறைப்பதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுத்துறை வங்கிகள் நாட்டின் நிதி அமைப்பில் முக்கிய பங்காற்றி வரும் நிலையில், இந்த புதிய வழிகாட்டுதல்கள் நிர்வாக செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் இந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க உள்ளனர்.

இந்த நடவடிக்கை மூலம் நிதி ஒழுங்கு மற்றும் நிலையான வளர்ச்சி தொடர்பான அரசின் கவனம் மேலும் வெளிப்படையாகியுள்ளது.


0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News