சுவீடன் நாடு, இஸ்ரோ அமைப்பின் சுக்ரயான்-1 திட்டத்தில் இணைய அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டம் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள முக்கிய விண்வெளி ஆய்வு முயற்சியாகும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஸ்வீடன், வெள்ளி கிரகத்தின் வளிமண்டலம், மேற்பரப்பு மற்றும் சூரியக் காற்று இடையேயான தாக்கங்களை ஆய்வு செய்ய தேவையான தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அறிவியல் நிபுணத்துவத்தை வழங்க உள்ளது. இந்த ஆய்வு மூலம் சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களின் காலநிலை மாற்றங்கள் மற்றும் இயற்கை அமைப்புகள் குறித்து மேலும் தகவல்கள் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சுக்ரயான்-1 திட்டம், இந்தியாவின் முக்கிய விண்வெளி ஆய்வு திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த விண்கலத்தை 2028ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. திட்டத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தியா மற்றும் ஸ்வீடன் நாடுகள் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆய்வு துறைகளில் தொடர்ந்து ஒத்துழைத்து வருகின்றன. இந்த புதிய கூட்டாண்மை, இரு நாடுகளுக்கிடையிலான விண்வெளி ஆராய்ச்சி தொடர்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுக்ரயான்-1 திட்டம் மூலம் வெள்ளி கிரகம் தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
0 Comments