Loading . . .




மெட்டாவின் புதிய ‘Forum’ செயலி அறிமுகம்

Janani G 2 hours ago தொழில்நுட்பம்

மெட்ட நிறுவனம் அமைதியான முறையில் “Forum” என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரெடிட் (Reddit) மற்றும் குவோரா (Quora) போன்ற தளங்களைப் போல செயல்படும் இந்த செயலி, பயனர்கள் கேள்விகள் எழுப்பி சமூக அடிப்படையிலான பதில்களை பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய செயலி, குறிப்பாக முகநூல் குழுக்களில் உள்ள உறுப்பினர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு கருத்துகள் மற்றும் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது. ஒரே ஆர்வம் கொண்ட பயனர்கள் இடையே கலந்துரையாடலை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பெரிய அளவிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் இந்த செயலி வெளியிடப்பட்டிருப்பது தொழில்நுட்ப உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக அடிப்படையிலான தகவல் பரிமாற்றம் மற்றும் கேள்வி-பதில் அம்சங்களை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.


தற்போது இந்த செயலி முதற்கட்டமாக ஐபோன் பயனர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்ட்  பயனர்களுக்கான வெளியீடு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.


புதிய தொடர்பு மற்றும் சமூக கலந்துரையாடல் முறைகளை உருவாக்கும் முயற்சியில் மெட்டா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை இந்த புதிய செயலி வெளிப்படுத்துகிறது.


0 Comments

Post your comment here

தொழில்நுட்பம் Relateted News