Loading . . .




பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: தமிழக காவல்துறை இயக்குநர் எச்சரிக்கை

The Forecast 3 years ago காவல் துறை

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: தமிழக காவல்துறை இயக்குநர்  எச்சரிக்கை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்" நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த வாரம்  சோதனை மேற்கொண்டனர். தமிழகத்தில் இச்சோதனையின்போது பல நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 200 அதிகமான சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நூறு நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.


0 Comments

Post your comment here

காவல் துறை Relateted News