இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி முயற்சியால் போஜராஜன் நகர் கண்ணன் சுரங்கப்பாதை ரூ.20 கோடி செலவில் அமைப்பதற்கான அடிக்கல்.
Arut Selvan 3 years ago சென்னை
இராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 53வது வார்டில் கடந்த 50 வருட காலமாக மக்களின் தீராத பிரச்சனையாக நீடித்துவந்த போஜராஜன் நகர் கண்ணன் சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி அவர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில், முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி சுரங்கப்பாதை அமைக்கும் பணி சுமார் ரூ.20 கோடி செலவில் அமைப்பதற்கான அடிகல் நாட்டு விழாவை இன்றைய தினம் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்கள் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன், மாவட்ட பொருப்பாளர் தா.இளைய அருணா, இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி, துணை மேயர் மு.மகேஷ்குமார், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் . கீதா சுரேஷ், மாமன்ற உறுப்பினர் .வேளாங்கன்னி, சென்னை மாநகராட்சி ஆணையர் .ககன்தீப் சிங் பேடி IAS, மண்டல துணை ஆணையர்..சிவகுரு பிரபாகரன் IAS, மாநகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் கழக உடன் பிறப்புகள் ஆகியோர் அனைவரும் கலந்துக்கொண்டனர். இராயபுரம் மக்களின் நீண்டகால பிரச்சனைக்கு தீர்வு கொண்டுவந்துள்ள முதலமைச்சர் அவர்களுக்கும், இந்த திட்டம் வருவதற்கு உறுதுணையாக இருந்த இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களுக்கும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்களுக்கும் எனது சார்பாகவும், இராயபுரம் தொகுதி மக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
0 Comments