சென்னை பெறுநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் கண்டுகழிக்கவும் உயர் அதிகாரிகளிடம் தங்களின் தேவைகளை எடுத்துறைத்து மகிழ்ச்சியுடன் பணிபுரியவும் சிறப்பு நிகழ்ச்சி நடத்த சென்னை பெறுநகர காவல் ஆணையர் ஷங்கர் ஜீவால் இ.க.ப., அவர்கள் உதாரவிட்டார். அதன் பேரில் மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி இ.க.ப., அவர்கள் ஏற்பாட்டில் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பங்கேற்க கூடுவோம் கொண்டாடுவோம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அக்டோபர் 2ஆம் தேதி அன்று வானகரத்தில் சென்னை பெறுநகர ஆணையர் ஷங்கர் ஜீவால் இ.க.ப., அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு இ.க.ப., அவர்கள் கலந்துகொண்டார். இதில் சமையல், ரங்கோலி,கட்டுரை போட்டி மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டபட்டது. இதில் அண்ணா நகர் துணை ஆணையர் விஜயகுமார் அவர்கள், கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் அவர்கள், கோயம்பேடு துணை ஆணையர் குமார் அவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காவல் துறையினரின் 24மணிநேர பணிச்சுமைகளுக்கு இடையில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் காவல் துறையினர் தங்கள் உயர் அதிகாரிகளிடம் தங்களின் தேவைகளை எடுத்துறைத்து, மேலும் ஒரு குடும்பமாக ஒன்று சேர்ந்து பங்குபேரும் பட்சத்தில் ஏற்றதாழ்வு இல்லாமல் தங்கள் உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அறிவுரை பெற்று தங்கள் பணியை சிறப்புடன் மேம்படுத்தவும் மற்றும் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவும், இதுபோன்ற நிகழ்ச்சி அனைத்து மாவட்டத்திலும் நடைபெறவேண்டி எதிர்பார்க்க படுகிறது. அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் காவல் துறையினர் புத்துணர்ச்சியுடன் தங்கள் பணிகளை தொடர வழி செய்கின்ற விதமாக அமையப்பெறுகிறது.
0 Comments