கோவை ஸகார் சிலிண்டர் வெடிப்பு. முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய உத்தரவு
The Forecast 3 years ago காவல் துறை
கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட பரிந்துரை மற்றும் கோவையில் பாதுகாப்பினைத் தொடர்ந்து உறுதி செய்திட தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு
கோவை, உக்கடம் பகுதியில் 23-10-2022 அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு
தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம்-ஒழுங்கு
நிலவரம் குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் (26-10-2022) தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக
காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும், கோவை மாவட்டத்தில்
செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும்,
கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும்,
பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய
புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திடஇக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது; மேலும்,
கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம்,
கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில் புதிய காவல் நிலையங்களைஉடனடியாக அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளார்.இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ இறையன்பு.இ.ஆ.ப. உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, காவல்துறை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு. இ.கா.ப., மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்.
0 Comments