Loading . . .




கோவை சிலிண்டர் வெடிப்பு மேலும் ஒருவர் கைது.

Theni Durai 3 years ago காவல் துறை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் ஜமேஷா முபினின் நெருங்கிய உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன் கடந்த 23-ம் தேதி காரில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்ததில், ஜமேஷா முபின்(28) என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள், வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27) முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரைக் கைது செய்தனர்

0 Comments

Post your comment here

காவல் துறை Relateted News