Loading . . .




சென்னை 4 வயது சிறுமி கடத்தல் கையுடன் பிடித்த சிட்லபாக்கம் காவல் நிலைய அதிகாரிகள்.

The Forecast 3 years ago காவல் துறை


சென்னை -சிட்லபாக்கத்தில் இருந்து கடத்தப்பட்ட 4 வயது சிறுமி வர்ஷா D-o. வினோத் என்பவரை ராதா நகரை சேர்ந்த சம்சுதீன் என்பவர் TN 22 CD 4131 என்ற ஆட்டோவில் கடத்திக் கொண்டு சிட்லபாக்கத்திலிருந்து எம்ஐடி  மேம்பாலம் வழியாக வந்து கொண்டிருந்தவரை போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் ஜலேந்திரன் மற்றும் முதல் நிலைக் காவலர்  முத்துக்குமார் ஆகியவர்கள்  மேற்கண்ட ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில் மேற்படி சிறுமி கடத்திக் கொண்டு போவது தெரியவந்தது.   மேற்படி சிறுமியை பாதுகாப்பான முறையில் 19.20 மணியளவில் மீட்டனர்.   மேற்கண்ட  கடத்தல் சம்பவத்தை பிடிப்பதற்கு  உதவியாக குரோம்பேட்டை காவல் ஆய்வாளர்  வெங்கடேஷ் அவர்களும் உறுதுணையாக இருந்து  தற்போது  சிறுமியும் சம்சுதீனும் விசாரணைக்காக சிட்லபாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

0 Comments

Post your comment here

காவல் துறை Relateted News