உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் துளிர் வாசகர் திருவிழா ..
Arut Selvan 3 years ago கல்வி
கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் உலக அறிவியல் தினத்தை முன்னிட்டு துளிர் வாசகர் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் க.தமிழ்செல்வி தலைமை வகித்தார். அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா வரவேற்றார்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் முன்னிலை வகித்தார்.மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் தொகுத்து வழங்கினார்.
துளிர் வாசகர் திருவிழாவை கல்வியாளர் என்.மாதவன் அவர்கள் தொடங்கி வைத்து பேசியதாவது மாணவர்கள் துளிர் வாசகர் திருவிழா மாணவர்களுக்கு மிகுந்த பயன் தரக்கூடியது எனவும், மாணவர்களுக்கு மூளையின் செயல்பாடுகள் பற்றியும்,அன்னிச்சை செயல் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார்.மாணவர்கள் உலக அறிவியல் தினம் ஏன் கொண்டாடுகிறோம் என மாணவர்கள் கேட்க யுனேஸ்கோ நிறுவனத்தால் அறிவியலை உலக அளவில் கொண்டு செல்ல உலகில் ஏற்பாடும் பிரச்சினைகள் மக்கள் தெரிவிப்பதிலும் அறிவியல் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பேசினார்.துளிர் திறனறிவுத் தேர்வு சான்றிதழை வழங்கி தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி அவர்கள் மாணவர்களுக்கு அறிவியல் சோதனைகள் மூலம் விளக்கினார். துளிர் வாசகர் திருவிழாவை மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்வில் வாழ்த்துரை களை மருத்துவர் சுவாமிநாதன்,மாவட்டத் தலைவர் வீரமுத்து, தொல்லியல் ஆய்வுகழக நிறுவனர் ஆ.மணிகண்டன்,மாவட்ட இணைச்செயலாளர் துரையரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக மாவட்ட இணைச் செயலாளர் சிவனாந்தம் பாடல்கள் பாடி மாணவர்களை உற்சாக படுத்தினார்.
துளிர் வாசகர் திருவிழாவில் மாணவர்கள் முகேஷ் வரன்,தீப்தா, அரவிந்த், தேவ ஸ்ரீ, ரித்திஸ்குமார், சக்தி ஆகியோர் துளிர் இதழை வாசித்து நூல் விமர்சனம் செய்தனர்.மாணவர்கள் துளிர் இதழில் அறிவியல் இயக்க கட்டுரை கள், தமிழ்நாட்டில் புலி,வேங்கைப்புலி சில அம்சங்கள், இந்தியாவின் செயற்கை மலைகள்,புழு மருத்துவம், யாருக்கு கிடைத்தது பதக்கம் உள்ளிட்ட தலைப்புகளை மாணவர்கள் விமர்சனம் செய்தனர்.மாணவர்கள் தங்களுடைய படைப்புகளை துளிர் ஆசிரியரிடம் சமர்ப்பித்தனர். இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜேந்திரன்,பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா,பள்ளி மேலாண்மை குழு துணைத்தலைவி வேதநாயகி,வார்டு உறுப்பினர் கலா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மணிமேகலை,நிவின்,செல்வி ஜாய், வெள்ளைச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.நிறைவாக ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.
0 Comments