சென்னை ராயபுரத்தில் குழந்தைகள் தின விழா மற்றும் அருணோதயா குழந்தைகள் சங்க கூட்டமைப்பு மாநாடு நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருணோதயா குழந்தைகள் சங்க கூட்டமைப்பு சார்பாக உலக குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் மற்றும் அருணோதயா குழந்தைகள் சங்க மாநாடு குழந்தைகள் விரும்பும் வன்முறையற்ற மகிழ்ச்சியான உலகம் என்கிற தலைமைப்பில் நடைபெற்றது.
இதில் தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன் மற்றும் காசிமேடு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பிரான்வின் டேனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே உரையாற்றினர்.
இந்நிகழ்வில் குழந்தைகள் விளையாட்டுகள், கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், கனவுகள் நினைவாகும் பயணம் ஆவணப்படம் வெளியீடு, வீதியோர குழந்தைகள் உலககோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற கருணாலயா பெண் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவிக்க நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்றது.
மாணவ மாணவியர்களுக்கு எந்த நேரமும் எந்த பிரச்சினைகள் நிகழ்ந்தாலும் உடனே காவல்துறைக்கும் இதுபோன்ற குழந்தைகள் சங்க கூட்டமைப்புக்கு எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும் உங்கள் விவரங்களை வெளியிடாமல் உங்களுக்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க என்னவெல்லாம் வழிவகை செய்து வருகிறது என்பது குறித்தும் மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.இவ்விழாவில் தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன் பேசுகையில் மாண்புமிகு தமிழக முதல்வர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பல எண்ணற்ற நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சமீபத்தில் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் போன்ற பல எண்ணற்ற திட்டங்களைதொடங்கி மாணவ மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த உலக குழந்தைகள் தினத்தில் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
0 Comments