Loading . . .




பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,04,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The Forecast 3 years ago சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. நாள்தோறும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் இல்லங்களில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து குப்பை சேகரிக்கப்படுகிறது. தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் பரவலாக்கப்பட்ட குப்பை பதனிடும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு குப்பைகளை கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 85,477 கடைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கடைகளின் உரிமையாளர்களுக்கு கட்டாயம் மக்கும். மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகள்வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை

மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 43,835 கடைகளில் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு குப்பைத் தொட்டிகளை வைக்காத கடைகளின் உரிமையாளர்களுக்கு உ ரூ.1,04,900/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு குப்பைத் தொட்டிகளை விரைந்து வைக்கவும் கடைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும். மக்காத குப்பைகளாக தரம் பிரித்து மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் அல்லது குப்பைகளை சேகரிக்கும் வாகனங்களில் சேர்க்க வேண்டும். நடைபாதை மற்றும் சாலைகளில் குப்பைகளை கொட்டும் கடைகளின் உரிமையாளர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

0 Comments

Post your comment here

சென்னை Relateted News