சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 14 இலட்சம் மதிப்பீட்டில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பாதை
The Forecast 3 years ago சென்னை
பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை கண்டுகளிக்க ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 14 இலட்சம் மதிப்பீட்டில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பாதையை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் அவர்கள், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு அவர்கள் மற்றும்
சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினர் .உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் (27.11.2022) திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன் அவர்கள், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் .த.வேலு அவர்கள், துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments