ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு
The Forecast 3 years ago திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி(14.11.2022) நடத்தப்பட்ட ஜவகர்லால் நேரு பற்றிய பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவன் இரா.கிஷோர் முதல் பரிசுக்கும், கலிக்கம்பட்டி சேரன் வித்யாலயா பதின்ம மேல்நிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி ஜோ.ஹெரின் ரித்திகா இரண்டாம் பரிசுக்கும், திண்டுக்கல் அகரம் அரசு மேல்நிலை 11-ஆம் வகுப்பு மாணவி சி.ஹரிணி மூன்றாம் பரிசுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு பிரிவில் கொழிஞ்சிப்பட்டி அரசு யர்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி த.ஐஸ்வர்யா லெட்சுமி மற்றும் கொடைக்கானல், பூம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவி து.துளசி ஆகியோர் சிறப்புப் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் பான்செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு இளங்கலை கணினிப் பயன்பாட்டியல் பிரிவு மாணவி வா.ராஜேஸ்வரி முதல் பரிசுக்கும், திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி மூன்றாம் ஆண்டு இளங்கலை கணினி அறிவியல் பிரிவு மாணவி இரா.கிருத்திகா இரண்டாம் பரிசுக்கும், திண்டுக்கல் புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு இளங்கலை விலங்கியல் பிரிவு மாணவி வெ.மோகனப்பிரியா மூன்றாம் பரிசுக்கும் தெரிவு செய்யப்பட்டனர்.
இப்பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசும் ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- , இரண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பிரிவில் சிறப்புப் பரிசு தலா ரூ.2000/- என்ற வகையில் ரூ.24,000 மதிப்புள்ள பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) .ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் .பெ.இளங்கோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0 Comments