முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
The Forecast 3 years ago திண்டுக்கல்
முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து தற்போது பல்வேறு படிப்புகளுக்கு, பல்வேறு தலைப்புகளில் கல்வி உதவித்தொகைகள் அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களது தலைமையில் 23.09.2022 அன்று நடைபெற்ற தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பள்ளி படிப்பு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் முன்னாள் படைவீரர் சிறார்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முன்னாள் படைவீரர் சிறார் கல்வி மேம்பாட்டு நிதியுதவியை (கல்வி உதவித்தொகை) 2022-23-ம் கல்வியாண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தற்போது வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை 500/-லிருந்து ஆண்டொன்றுக்கு ரூ.2,000/- ஆகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தற்போது வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை ரூ.800/-லிருந்து ஆண்டொன்றுக்கு ரூ.4,000/- ஆகவும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தற்போது வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை ரூ.1,000/-லிருந்து ஆண்டொன்றுக்கு ரூ.5,000/-ஆகவும், 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தற்போது வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை ரூ.1,500/-லிருந்து ஆண்டொன்றுக்கு ரூ.6,000/-ஆகவும் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், தங்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments