தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சார்பில், சுமார் 16 இலட்சம் வழங்கப்பட்டது
The Forecast 3 years ago தமிழ்நாடு
தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சார்பில், சுமார் 16 இலட்சம் வழங்கப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்களை (2.1.2023) தலைமைச் செயலகத்தில், பல்வேறு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் 4 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து, புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இன்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், ஜாக்டோ-ஜியோ, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிருபர்கள் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம், தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம், அலுவலக உதவியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்தனர்.
அகவிலைப்படி உயர்த்தி வழங்கியமைக்காக நன்றி தெரிவித்த சங்க நிர்வாகிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
0 Comments