Loading . . .




தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தேர்தல் விழிப்புணர்வு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசு

The Forecast 3 years ago சென்னை

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்களுக்கான 

தேர்தல் விழிப்புணர்வு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2023ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் சார்பில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், பெருங்குடி வளாகக் கல்லூரி மாணவர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு குறித்த வினாடி வினா நிகழ்ச்சி 05.01.2023 அன்று பல்கலைக்கழகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த வினாடி வினா நிகழ்ச்சியில் 480 மாணவர்கள் முதற்கட்டத் தேர்வில் கலந்து கொண்டனர்.  அதிலிருந்து 6 அணிகள் தேர்வு செய்யப்பட்டது.  தேர்வு செய்யப்பட்ட அணிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000/-, இரண்டாம் பரிசாக ரூ.5,000/-, மூன்றாம் பரிசாக ரூ.3,000/-, ஆறுதல் பரிசாக மூன்று அணிகளுக்கு தலா ரூ.1000/- வழங்கப்பட்டது.

இந்த வினாடி வினா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணிகளின் மாணவர்களுக்கு கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/வட்டார துணை ஆணையாளர் (தெற்கு) திரு.எம்.பி.அமித், இ.ஆ.ப., அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் தலைவர்/பேராசிரியர் முனைவர் வி.பாலாஜி, ஆராய்ச்சி மற்றும் பதிப்பகத்துறை இயக்குநர் பேராசிரியர் முனைவர் ஆர்.ஹரிதா தேவி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவிப் பேராசிரியர் திருமதி ஆர்த்தி ரத்னா, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) திரு.கு.குலாம் ஜீலானி பாபா மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி உதவிக் கல்வி அலுவலர் திரு.முனியன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


0 Comments

Post your comment here

சென்னை Relateted News