Loading . . .




பொதுத் தேர்வு எழுதும் பிளஸ்2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் கட்டாயம்

The Forecast 3 years ago கல்வி

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் தங்களை தயார்படுத்தி வரும் நிலையில், அவர்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிக்குள் இதற்கான பணிகளை முடிக்கவேண்டும் என்றும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் துணையேடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. பொதுத்தேர்வுக்கு பிறகு கல்லூரி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மின்னஞ்சல் தேவைப்படுவதால் அரசு பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ்2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் கட்டாயம் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து, மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உயர்கல்வி சேர்க்கை தொடர்பான பல்வேறு கடிதங்கள், அறிவுறுத்தல்கள் எல்லாம் மாணவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட இருக்கின்றன. இந்த சுற்றறிக்கை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


0 Comments

Post your comment here

கல்வி Relateted News