தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசும்போது, ‘எதிர்க்கட்சி தலைவரை பேச விடுங்கள். அவருக்கு பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்’ என்று சவால் விடுத்தார். ஆனால், அரசு மீது குற்றச்சாட்டு கூறிவிட்டு முதல்வரின் பதிலை கேட்காமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு பேசிய, முதல்வர் அதிமுக ஆட்சியில் நடந்த வன்முறை சம்பவங்களை சட்டப்பேரவையில் அடுக்கடுக்காக பட்டியலிட்டு பேசினார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேச எழுந்தார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது என்றார். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, அரசு மீது பொதுவான குற்றச்சாட்டை கூறக்கூடாது. குறிப்பிட்ட சம்பவத்தை சொல்லிவிட்டு பேச வேண்டும். எந்த ஆதாரத்தையும் என்னிடம் தரவில்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதி அளியுங்கள். எடுத்த எடுப்பிலேயே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார். அவர், என்ன கூறுகிறார் என்பதை கேட்க ஆர்வமாக இருக்கிறேன். அதற்கு பதிலும் சொல்ல தயாராக இருக்கிறேன். அவரை பேச விடுங்கள்.
எடப்பாடி பழனிச்சாமி: நாட்டில் தினந்தோறும் நடக்கும் சம்பவத்தைதான் பேசுகிறேன். தினந்தோறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கிறது. சமீபத்தில் விருகம்பாக்கம் சாலிகிராமம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
(தொடர்ந்து எடப்பாடியை பேச அனுமதி அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் எழுந்து நின்று எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதி அளிக்கும்படி சபாநாயகரிடம் அனுமதி கேட்டனர்.)
சபாநாயகர் அப்பாவு: முதல்வராக இருந்தவர் நீங்கள். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பரவாயில்லை. பிரச்னை தற்போது நீதிமன்றத்தில் உள்ளதால், அவையில் எப்படி பேச அனுமதி அளிக்க முடியும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவரை பேச விடுங்கள். அதற்கு நான், பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அப்போதுதான் அவர்களது ஆட்சியில் என்ன நடந்தது என்று தெரியவரும்.
எடப்பாடி பழனிசாமி: ஆளும் கட்சி சொன்னால்தான் அனுமதி தருவீர்களா?
முதல்வர் மு.க.ஸ்டாலின்: சபாநாயகரை மிரட்டும் வகையில் பேசுவதை கண்டிக்கிறேன். நேரமில்லா நேரத்தில் எப்படி பேச வேண்டும் என்று ஒரு விதி உள்ளது.
சபாநாயகர்: தமிழகத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை நடந்தால், நேரமில்லா நேரத்தில் பேச அனுமதிக்கப்படும். தற்போது இந்த பிரச்னை நீதிமன்ற வழக்கில் உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் சிறையில் உள்ளார்கள். இந்த சபையில் நாட்டு மக்கள் பற்றி பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி: வேண்டும் என்றே எங்களை பேச விடாமல் திசை திருப்புகிறீர்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதியுங்கள். என்ன பேசுகிறார் என்று கேட்போம். நான் ஓடி ஒளியவில்லை. அவருக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி: சென்னையில் கடந்த 31ம் தேதி அரசியல் பொதுக்கூட்டம் நடந்தது. அங்கு பாதுகாப்புக்கு இருந்த பெண்
பாதுகாவலருக்கு 2 திமுகவினர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அவர் அழுது கொண்டே போலீசில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அங்கிருந்தவர்கள், அவரை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளனர். ஆனால், பெண் காவலர்கள் சமாதானம் அடையாததால், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாமல், 2 நாளுக்கு பின் கைது செய்துள்ளனர். இது மிகவும் வேதனை அளிக்கிறது.
(எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்தார். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இந்தநிலையில், முதல்வரின் பதிலுரையை கேட்காமல், அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்யவில்லை. இவர்கள் வழக்கம்போல் வெள்ளை சட்டையில் வந்திருந்தனர்.)
அதிமுகவினர் வெளிநடப்பு செய்தபிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை பற்றி எதிர்க்கட்சி தலைவர் இங்கே கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்குரிய விளக்கத்தை நான் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துவிட்டு ஓடி, ஒளியாமல் இருந்து என்னுடைய பதிலை கேட்டிருக்க வேண்டும். அதுதான், உள்ளபடியே நியாயமாக இருக்கும். அதனால்தான் நான் சொன்னேன், நான் ஓடி, ஒளிய மாட்டேன், பதில் சொல்வதற்கு தயாராக இருக்கின்றேன் என்று சொன்னேன்.
31-12-2022 அன்று இரவு 10.45 மணிக்கு பெண் காவலர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உடனே எப்.ஐ.ஆர். போடப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் மற்றும் சாட்சிகளை காவல் ஆய்வாளர் விசாரணை செய்து, சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து அந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரவின்குமார், ஏகாம்பரம் ஆகியோர் 3ம் தேதி இரவு 10 மணிக்கு கைது செய்யப்பட்டு, அடுத்த நாள் காலையே நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். புகார் கொடுத்த அன்றே எப்ஐஆர் பதிவு செய்து, புலன் விசாரணை நடத்தி, 72 மணி நேரத்தில் அவர்களை கைது செய்ததுபோல், எந்த வழக்கிலாவது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்ததுண்டா என்ற அந்த கேள்வியைத்தான் நான் கேட்கிறேன்எஸ்.பி. அந்தஸ்த்தில் இருந்த பெண் போலீஸ் அதிகாரிகள் இருவரை, இதுமாதிரி புகாரில் அலைகழித்த ஆட்சிதானே அதிமுக ஆட்சி. இந்த அரசை பொறுத்தவரையில், பெண்களுக்கு எதிராக, பெண் காவலர்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்க்கட்சி தலைவர் தனது உரையின் தொடக்கத்தில், ஒட்டுமொத்தமாக, தினந்தோறும் வழிப்பறி, கொலை, கொள்ளை நடந்து கொண்டிருக்கிறதென்று சொன்னார்.
ராமநாதபுரம், பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவு விழாவில் துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 பேர் மரணம், யாருடைய ஆட்சியில்? தேவர் ஜெயந்தி விழாவில் மதுரையில் வெடிகுண்டு வீச்சு, 4 பேர் மரணம். சிவகங்கை, திருப்பாச்சேத்தி உதவி ஆய்வாளர் ஆன்வின் சுதன் படுகொலை 2012ல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவிகள் மரணம், யாருடைய ஆட்சியில், அதிமுக ஆட்சியில்தானே? கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின்போது மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது, பொதுமக்கள் ஐ.ஜியை தரையில் இழுத்து சென்றது, அவரது கைத்துப்பாக்கி காணாமல் போனது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதாதா.வன்னியர் சங்க மாநாட்டை தொடர்ந்து எழுந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் நூறு வாகனங்கள் எரிப்பு, ஆயிரம் வாகனங்கள் உடைத்ததும் அதிமுக ஆட்சியில்தான். ஜல்லிக்கட்டு அனுமதிக்கு அமைதி போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி, பொதுமக்கள் வாகனங்களை காவல் துறையினரே தீயிட்டு கொளுத்தியதும் அதிமுக ஆட்சியில்தான். சாத்தான்குளத்தில் லாக்கப் வன்முறை, காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம்.
இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் இந்த ஆட்சியில் இல்லை, அதிமுக ஆட்சியில்தான்.
இந்த ஆட்சியை பொறுத்தவரை, யாராக இருந்தாலும், அரசியல் பார்க்காமல், கட்சி பார்க்காமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆட்சிதான் திமுக ஆட்சி. எனவே, எதிர்க்கட்சி தலைவர் சொல்லிய குற்றச்சாட்டுக்கு இதையே பதிலாக சொல்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவிகள் மரணம், யாருடைய ஆட்சியில், அதிமுக ஆட்சியில்தானே? கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின்போது மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது அதிமுக ஆட்சியில்தானே?
2012ல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவிகள் மரணம், யாருடைய ஆட்சியில், அதிமுக ஆட்சியில்தானே? கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின்போது மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது, பொதுமக்கள் ஐ.ஜியை தரையில் இழுத்து சென்றது, அவரது கைத்துப்பாக்கி காணாமல் போனது. அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதாதா.
வன்னியர் சங்க மாநாட்டை தொடர்ந்து எழுந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் நூறு வாகனங்கள் எரிப்பு, ஆயிரம் வாகனங்கள் உடைத்ததும் அதிமுக ஆட்சியில்தான். ஜல்லிக்கட்டு அனுமதிக்கு அமைதி போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி, பொதுமக்கள் வாகனங்களை காவல் துறையினரே தீயிட்டு கொளுத்தியதும் அதிமுக ஆட்சியில்தான். சாத்தான்குளத்தில் லாக்கப் வன்முறை, காவல் நிலையத்தில் தந்தை மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம்.
இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் இந்த ஆட்சியில் இல்லை, அதிமுக ஆட்சியில்தான்.
இந்த ஆட்சியை பொறுத்தவரை, யாராக இருந்தாலும், அரசியல் பார்க்காமல், கட்சி பார்க்காமல் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆட்சிதான் திமுக ஆட்சி. எனவே, எதிர்க்கட்சி தலைவர் சொல்லிய குற்றச்சாட்டுக்கு இதையே பதிலாக சொல்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவிகள் மரணம், யாருடைய ஆட்சியில், அதிமுக ஆட்சியில்தானே? கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தின்போது மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது அதிமுக ஆட்சியில்தானே?
0 Comments