Loading . . .




தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

The Forecast 3 years ago தமிழ்நாடு

தமிழக காவல்துறையில் 7 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்

(ஏஎஸ்பிக்கள்), காவல்

கண்காணிப்பாளர்களாக

(எஸ்பி) பதவி உயர்வு அளிக்கப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் மட்டும் செய்யப்பட்டனர்.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் கே.பணீந்திரரெட்டி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு பதவி உயர்வுடன்

பணியிட மாற்றம் செய்யப்பட்ட

அதிகாரிகள் அங்கித் ஜெயின்-பொருளாதார

குற்றப்பிரிவு மத்திய மண்டல எஸ்பி (விருத்தாச்சலம் ஏஎஸ்பி), ராஜத் சதுர்வேதி-சென்னை பெருநகர காவல்துறையின் மயிலாப்பூர் துணை

ஆணையர் (திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி ஏஎஸ்பி), ஸ்ரேயா குப்தா- தமிழ்நாடு காவல்துறையின்

மாநில குற்ற ஆவண காப்பக எஸ்பி (தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஏஎஸ்பி), அபிஷேக் குப்தா-திருப்பூர்

மாநகர காவல்துறையின் வடக்கு துணை ஆணையர் (திண்டிவனம் ஏஎஸ்பி), கௌதம் கோயல்-மதுரை

மாநகர காவல்துறையின்

தலைமையிட துணை ஆணையர் (ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஏஎஸ்பி), பி.அரவிந்த்-மதுரை மாநகர

காவல்துறையின் வடக்கு துணை ஆணையர் (ஓசூர் ஏஎஸ்பி), ஏ.கே.அருண்

கபிலன்-சென்னை பெருநகர

காவல்துறையின் தியாகராயநகர் துணை ஆணையர் (திண்டுக்கல் ஊரகப் பகுதி ஏஎஸ்பி).

பணியிட மாற்றம்: பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள்  கருணாசாகர்-காவலர்

நலப்பிரிவு டிஜிபி (டிஜிபி மத்திய அரசுப் பணி), சைலேஷ்குமார் யாதவ்- தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி

(காவலர் நலப்பிரிவு ஏடிஜிபி),

ரோகித் நாதன் ராஜகோபால் -சென்னை பெருநகர காவல்துறையின்

அண்ணாநகர் துணை ஆணையர் (மயிலாப்பூர் துணை ஆணையர்),

எஸ்.மெகலினா ஐடன்-பொருளாதார

குற்றப்பிரிவு தெற்கு மண்டல எஸ்பி (தமிழ்நாடு காவல்துறையின் குற்ற

ஆவண காப்பக எஸ்பி),

ஜி.வனிதா-சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான

குற்றத்தடுப்புப் பிரிவு எஸ்பி

(மதுரை மாநகர காவல்துறையின்

தலைமையிட துணை ஆணையர்),

எஸ்.ராதாகிருஷ்ணன்-சென்னை பெருநகர காவல்துறையின் தலைமையிட துணை ஆணையர் (சேலம் மாநகர காவல்துறையின்

தலைமையிட துணை ஆணையர்), இ.டி.சாம்சன்-தென்காசி மாவட்ட எஸ்பி

(காத்திருப்போர் பட்டியல்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்-சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு

எஸ்பி (தென்காசி மாவட்ட எஸ்பி), எஸ்.எஸ்.மகேஷ்வரன்-பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட எஸ்பி (சென்னை மதுவிலக்கு

அமலாக்கப்பிரிவு எஸ்பி), ஆஷிஷ் ராவத்-தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி (காத்திருப்போர் பட்டியல்), ஜெ.முத்தரசி-சென்னை சிபிசிஐடி எஸ்பி (தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி),

எஸ்.செல்வராஜ்-சிவகங்கை மாவட்ட எஸ்பி (சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி எஸ்பி),எம்.மனோகர் -சென்னை பெருநகர காவல்துறையின் மேற்கு

மண்டல இணை ஆணையர் (தமிழ்நாடு காவல்துறையின் தலைமையிட டிஐஜி), அபிஷேக் தீக் ஷித்-தமிழ்நாடு

காவல்துறையின் தலைமையிட டிஐஜி (காத்திருப்போர் பட்டியல்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments

Post your comment here

தமிழ்நாடு Relateted News