Loading . . .




பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிக்காக 200 கைத்தெளிப்பான்கள் மற்றும் 6 ட்ரோன் இயந்திரங்கள்

The Forecast 3 years ago சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிக்காக 200 கைத்தெளிப்பான்கள் மற்றும் 6 ட்ரோன் இயந்திரங்களை   நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் . கே.என்.நேரு அவர்கள்  (13.01.2023) வழங்கினார்.பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள்  1 முதல் 15 வரை கொசு ஒழிப்புப் பணிக்காக ரூ.98 இலட்சம் மதிப்பில் 200 கைத்தெளிப்பான்கள் மற்றும் 6 ட்ரோன் இயந்திரங்களை   நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு அவர்கள்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் . மா.சுப்பிரமணியன் அவர்கள்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே.சேகர் பாபு அவர்கள்  (13.01.2023)  மாநகராட்சிப் பணியாளர்களிடம் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்துப் பெறுவதற்காக பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பச்சை மற்றும் நீல நிறத்திலான 20 ஆயிரம் புதிய குப்பைத் தொட்டிகளை  அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டு மண்டலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

கொசு ஒழிப்புப் பணிகள்

பெருநகர சென்னை மாநகராட்சியில் கொசுத்தொல்லை மற்றும் கொசுக்களினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில், மொத்தம் 3,312 தற்காலிக மற்றும் நிரந்தரப் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.  கொசுக்கள் உற்பத்தியினை கட்டுப்படுத்த பொது சுகாதாரம் பூச்சி தடுப்புத் துறையில் 68 எண்ணிக்கையிலான வாகனங்களில் பொருத்தப்பட்ட பெரிய புகைபரப்பும் இயந்திரங்கள், கையினால் எடுத்துச் செல்லும் 240 புகைபரப்பும் இயந்திரங்கள் மற்றும் 8 சிறிய புகைபரப்பும் இயந்திரங்கள் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் குடிசைப் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புகைபரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கொசுப்புழு உற்பத்தியில் நீர்வழித்தடங்களில் கொசுக்களை ஆரம்பநிலையில் கட்டுப்படுத்த 224 கைத்தெளிப்பான்கள், பேட்டரி மூலம் இயங்கக் கூடிய 300 கைத்தெளிப்பான்கள் மற்றும் 120 விசைத்தெளிப்பான்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், கொசு ஒழிப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில்,  பெருநகர சென்னை மாநகராட்யின் மண்டலம் 1 முதல் 15 வரை கொசு ஒழிப்புப் பணியை தீவிரப்படுத்த மழைநீர் வடிகால் கால்வாய்களில் கொசுப்புழு நாசினி தெளிப்பதற்காக ஒரு கோட்டத்திற்கு ஒரு கைத்தெளிப்பான் வீதம் 200 கோட்டங்களிலும் மூலதன நிதியின் கீழ் ரூ.17 இலட்சம் மதிப்பில் 200 புதிய கைத்தெளிப்பான்களும், நீர்வழித்தடங்களில் கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ள பெருநிறுவன சமுக பங்களிப்பு (CSR) நிதியின் கீழ் தலா ரூ.13.5 இலட்சம் என மொத்தம் ரூ.81 இலட்சம் மதிப்பீட்டில் 6 ட்ரோன் இயந்திரங்களும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் இன்று (13.01.2023) பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியாளர்களிடம் வழங்கப்பட்டது.

மக்கும், மக்காத குப்பைகளைப் பெறுவதற்கான புதிய குப்பைத் தொட்டிகள்

திடக்கழிவு மேலாண்மைத் துறையின் சார்பில் வீடுகளில் குப்பைகளை மக்கும் மக்காத குப்பைகளாக பிரித்துப் பெறுவதற்காக 5,551 பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.  இவ்வாகனங்களில் குப்பைகளை மக்கும் மக்காத குப்பைகளாகப் பிரித்து பெறுவதற்காக 44,234  பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகள் பயன்பாட்டில் உள்ளன.பயன்பாட்டில் உள்ள குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், குப்பைத் தொட்டிகளின் வடிவம் மற்றும் தாங்கும் திறன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட பச்சை மற்றும் நீல நிறத்திலான 20 ஆயிரம் புதிய குப்பைத் தொட்டிகளை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இன்று பார்வையிட்டு மண்டலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில்  மேயர் திருமதி. ஆர்.பிரியா அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. மு.மகேஷ் குமார் அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் . ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் .நா.இராமலிங்கம் அவர்கள்,  நிலைக்குழுத் தலைவர்கள் .க.தனசேகரன் (கணக்கு) அவர்கள், .தா.இளையஅருணா (நகரமைப்பு) அவர்கள், டாக்டர் கோ.சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்) அவர்கள்,  சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரி விதிப்பு (ம) நிதி) அவர்கள், நியமனக் குழு உறுப்பினர் சொ.வேலு அவர்கள் ,துணை ஆணையாளர்கள் .எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., (பணிகள்) அவர்கள், .ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., (மத்திய வட்டாரம்) அவர்கள், திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்) அவர்கள், இராயபுரம் மண்டலக்குழுத் தலைவர்.ஶ்ரீராமுலு அவர்கள், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், உர்பேசர் சுமீத் நிறுவன அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

சென்னை Relateted News