Loading . . .




காவல்துறையினரின் இந்த அதிரடி சோதனையால் நடைபெற இருந்த பெரும் குற்றசெயலின் சதித்திட்டம் முறியடிப்பு

Arut Selvan 3 years ago காவல் துறை

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் சரகத்தில் நாட்டுவெடிகுண்டுகள் புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், ஐ.பி.எஸ், அவர்களின் உத்தரவின்படி திருவிடைமருதூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜாபர் சித்திக் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர், துப்பறியும் நாய்ப்படை பிரிவினர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும்

நிபுணர் குழுவினருடன்  21.01.2023 ம் தேதி பல்வேறு இடங்களில் சோதனை மேற்காள்ளப்பட்டது. இதில் குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய பிரபல ரவுடிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டதில் சந்தேகத்திற்கிடமாக சைக்கிள் பால்ட்ரஸ், ஆணிகள் மற்றும் பட்டாக்கத்திகள் ஆகிய பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி சோதனையின்போது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர், காவல்துறையினரின் இந்த அதிரடி சோதனையால் நடைபெற இருந்த பெரும் குற்றசெயலின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக இருந்துவரும் குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிரதேடுதல்

வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

0 Comments

Post your comment here

காவல் துறை Relateted News