தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் காவல் நிலையத்தில் வரும் புகார்களுக்கு உடனடியாக வழக்கு பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வருகிறது. இந்நிலையில் இந்நிலையில் பட்டுக்கோட்டை உட்கோட்டத்தில் கடந்த 12.08.2020-ம் தேதி பேராவூரணி
பேராவூரணி காவல் நிலையத்தில் POCSO சட்டத்தின்கீழ் பதிவு செய்த வழக்கில் குற்றவாளி தங்கவேல் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, இவ்வழக்கில் புலன் விசாரணை முடித்து எதிரி மீது குற்றப்பத்திரிக்கை 20.09.2020-ல் POCSO நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. வசந்தா மற்றும் காவல் ஆய்வாளர் திருமதி. உஷா ஆகியோர் புலன் விசாரணை செய்தும், நீதிமன்ற அலுவல் பெண் காவலர் செல்வி .திவ்யலெட்சுமி அவர்கள் திறம்பட பணியாற்றியதன் மூலம் இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை முடித்து, 07.02.2023-ம் தேதி POCSO நீதிமன்றத்தால் இவ்வழக்கின் எதிரி தங்கவேல்-க்கு 06 வருடம் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 12,000 அபராத தொகையும் விதித்து தஞ்சாவூர் POCSO நீதிமன்ற நீதிபதி . சுந்தர்ராஜன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments