முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டியினை மேயர் ஆர்.பிரியா அவர்கள் (10.02.2023) தொடங்கி வைத்து பார்வை
The Forecast 3 years ago சென்னை
பெருநகர சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-41க்கு உட்பட்ட கண்ணாம்பு கால்வாய்
பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட விளையாட்டுத் திடலில் முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து விளையாட்டுப்
போட்டியினை மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று (10.02.2023) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.ஜான் எபினேசர் அவர்கள், மண்டலக்குழுத்
தலைவர் திரு.நேதாஜி யு. கணேசன் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி விமலா அவர்கள், திருமதி மணிமேகலை
அவர்கள், வடக்கு வட்டார துணை ஆணையாளர் .எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments