Loading . . .




கந்தர்வக் கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையங்களில் குறும்படங்கள் தயார் செய்ய வேண்டும் என அறிவுரை..

Arut Selvan 3 years ago புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை பிப் 18.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அவர்கள் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன்  வழிகாட்டுதலின் படியும், புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர்கள் 

வெங்கடேஸ்வரி,நரசிம்மன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் ஆகியோரிகளின்  ஆலோசனையின் படியும், கந்தர்வகோட்டை  ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கத்திரிக்காடு இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நடைபெற்ற ஆண்டு விழா நடைபெற்றது.தன்னார்வலர் சத்யா வரவேற்றார். இவ்விழாவில் ஆடல்,பாடல், கரகாட்டம் என மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற பெற்றது .ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கந்தர்வகோட்டை  ஒன்றிய  இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா   பேசியதாவது  மாணவர்களின் கற்பனைத்திறன், படைப்பாற்றல் திறன், சிந்திக்கும் திறன்களை வெளிக்கொணரும் விதமாக சிட்டுக்களின் குறும்படம் என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. குறும்படத்திற்கான தலைப்புகளாக சுற்றுச்சூழல், எனது ஊர், குழந்தைகளின் பாதுகாப்பு, எனக்கு பிடித்த தலைவர், தன் சுத்தம் என்ற தலைப்பில் குறும்படங்களை தயார் செய்ய வேண்டும்.தன்னார்வலர்கள் தங்களுடைய இல்லம் தேடிக் கல்வி மையங்களில்  குழந்தைகளை கொண்டு உருவாக்க வேண்டும் ஒரு மையம் ஒரு குறும்படத்தை மட்டும் தயார் செய்ய வேண்டும்.குறும்படத்திற்கான கதை,கதாபாத்திரம், வசனம் மற்றும் கதை நடத்தக்கூடிய சூழல்,கால அமைப்பு ஆகியவற்றை தயார் செய்வதற்கு மாணவர்களை தன்னார்வலர்கள் ஊக்க படுத்த வேண்டும் என்று பேசினார்.ஒவியம், கட்டுரை, பேச்சு போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிறைவாக தன்னார்வலர் ஆர்த்திகா நன்றி கூறினார்.

0 Comments

Post your comment here

புதுக்கோட்டை Relateted News