கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் திறனறிவு தேர்வு..750 மாணவர்கள் பங்கேற்பு..
The Forecast 3 years ago புதுக்கோட்டை
கந்தர்வக்கோட்டை பிப் 23 .தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் துளிர் திறனறிவுத் தேர்வு மாநிலம் முழுவதும் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாரத்தில் நடைபெற்ற தேர்வில் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். துளிர் திறனறிவுத் தேர்வு என்பது தொடக்கநிலை, உயர் தொடக்க நிலை, இடைநிலை ,மேல்நிலை என நான்கு பிரிவுகளாக நடைபெறுகிறது. தொடக்கநிலை மாணவர்களுக்கு 50 வினாக்களும், மற்ற மாணவர்களுக்கு 100 வினாக்களும் இடம்பெற்றிருக்கும்.
இத்தேர்வினை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஷ்பனம்,அக்கசிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி ஒருங்கிணைத்தார்.தேர்வு மைய ஒருங்கிணைப்பாளர்களாக வட்டாரத் தலைவர் ரகமதுல்லா, வட்டாரச் செயலாளர் சின்ன ராஜா ஆகியோர் செயல்பட்டனர். தேர்வு பிரிவு செயலாளராக தங்கராசு செயல்பட்டார் . முன்னதாக தேர்வினை மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட இணைச்செயலாளர் துரையரசன் ஆகியோர் பார்வையிட்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் துளிர் திறனறிவுத் தேர்வு நடத்தி வருகிறது தேர்வில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதல் 10 இடம் பெரும் மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். தேர்வில் கலந்து கொள்ளக்கூடிய அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் மாதந்தோறும் தமிழ் வழியில் வெளிவரும் துளிர் மாத இதழ்கள் வழங்கப்படும் துளிர் மாத இதழ் என்பது அறிவியல் கருத்துக்களை தமிழ் மொழியில் வெளியிட்டு வருகிறது. மாணவர்கள் தங்களுடைய படைப்புகளை துளிர் மாத இதழ் அனுப்பி வைக்கலாம் துளிர் இதழ் வாசிப்பதன் மூலம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறந்த முறையில் வழங்கி வருகிறது.
துளிர் திறனறிவுத் தேர்வு எதிர்கால போட்டித் தேர்வு எழுதிக் கொள்ள எதிர்கொள்ளக்கூடிய மாணவர்களுக்கு ஒரு முன்னோட்டம் தேர்வாக கருதப்படுகிறது. தேர்வில் கணிதம், அறிவியல் ,சமூக அறிவியல், அறிவியல் மனப்பான்மை புரிந்து கொள்ளும் திறன், சிந்தனை தூண்டுதல் உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இந்த வினாக்களுக்கு மாணவர்கள் விடை அளிக்கும் போது அவர்களுடைய கற்றல் திறன் மேம்படுவதுடன் அறிவியல் மனப்பான்மை, சிந்திக்க கூடிய ஆற்றலை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து வழங்கி வருகிறது. இத்தேர்வில் கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி , அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாள விடுதி, காட்டு நாவல் , பழைய கந்தர்வகோட்டை, மெய்குடிப்பட்டி , அரியாணிப்பட்டி, வேம்பன் பட்டி அக்கச்சிப்பட்டி, நடுப்பட்டி ,மட்டங்கால் கொத்தகப்பட்டி, சங்கம் விடுதி, காட்டுநாவல், சுந்தம் பட்டி ,முள்ளிக்கம்பட்டி, பழைய கந்தர்வக்கோட்டை,முதுகுளம் ,வீரடிப்பட்டி, துருசுப்பட்டி,மருங்கூர் டி,அருள்மாரி, கிறிஸ்து ராஜா மெட்ரிக் பள்ளி ,மெய்குடிப்பட்டி, வடுகப்பட்டி ,மணப்பட்டி,கெண்டையம்பட்டி ஆகிய ஊரைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளிகளும் தெற்கு வாண்டான்விடுதி தெற்கு , வடக்கு ஆத்தங்கரை விடுதி, குளவாய் பட்டி, நெப்புகை , மல்லிகை நத்தம், சிவந்தான்பட்டி, துருசுப்பட்டி,குளவாய்பட்டி, பிசானத்தூர், நம்புரான் பட்டி ,ஆகிய ஊரைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்களும் தேர்வு எழுதினார். தேர்வு மைய மேற்பார்வையாளராக தலைமை ஆசிரியர்கள் செயல்பட்டனர்.மாணவர்கள் தேர்வு குறித்து தெரிவித்த கருத்து தமிழக அரசு பாடல்கள் பூவிலிருந்து சேகரிக்கும் தேன் பூச்சி டிசம்பர் 25ஆம் தேதி என்ன நாள், தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம் போன்ற வினாக்கள் பொது அறிவை வளர்க்கும் வகையிலும், கணித திறன் புரிந்து கொள்ளக்கூடிய வினாக்களும், புவியியல், அரசியல் அமைப்புக்கள் பற்றிய வினாக்கள் இடம்பெற்றிருந்தது என்று தெரிவித்தனர்.
0 Comments