வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடத்திற்கு அடிக்கல்
The Forecast 3 years ago வேலூர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (18.02.2023) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு. இ.ஆ.ப. தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments