அரசு அமைத்துள்ள கமிட்டியின் சார்பில், கட்டணம் நிர்ணயித்த பின் மட்டுமே, மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும்
The Forecast 3 years ago கல்வி
தமிழக பள்ளிக்கல்வியின் அங்கீகாரம் பெற்று, 13 ஆயிரம் நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் செயல்படுகின்றன. அதேபோல், 1,400க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகள் செயல்படுகின்றன.
இந்த பள்ளிகளில், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், ஜனவரி முதல் ஜூன் வரையிலும், பல்வேறு கட்டங்களாக மாணவர் சேர்க்கை நடக்கும். அவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப, கல்வி கட்டணம் வசூலிக்கப்படும்.
ஒவ்வொரு பள்ளிக்கும், அதன் உள் கட்டமைப்பு, கல்வி சார் இணை செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி, அரசால் அமைக்கப்பட்ட குழுவால், கட்டணம்நிர்ணயிக்கப்படுகிறது
இந்த கட்டணத்தை விட
அதிகமாக பள்ளிகள் வசூலிக்க கூடாது.
இந்நிலையில், 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, கடந்த கல்வி ஆண்டுடன் கட்டணநிர்ணயம் முடிந்து விட்டது. இந்த பள்ளிகளுக்கு, புதிய கல்வி ஆண்டுக்கான கட்டணம் நிர்ணயிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில், பல தனியார் பள்ளிகள் தங்களுக்கு, கட்டணம் நிர்ணயிக்கும் முன்பே, மாணவர்களிடம் கடந்த ஆண்டை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக, கல்வி அலுவலர்களுக்கு புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, தனியார் பள்ளிகள் இயக்குனரகத்தில் இருந்து, மாவட்ட தனியார் பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு, அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அனைத்து சுயநிதி பள்ளிகளும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கட்டணம் மாற்றம் உள்ள பள்ளிகள், கட்டண நிர்ணய குழுவில் மாற்றம் செய்தபின், உரிய கட்டணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாறாக அதிக கட்டணம் வசூலித்தால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என,அறிவுறுத்தப்பட்டுள்ளது
0 Comments