சென்னை: அதிக திறன்கொண்ட 400 க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை சென்னை காவல்துறை பொருத்தியிருப்பதன் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகள் பாதுகாப்பான பகுதிகளாக மாறியிருக்கின்றன.
வேளச்சேரி மற்றும் திருவான்மியூர், சாஸ்திரி நகர் காவல் எல்லையில் புதிதாகப் பொருத்தப்பட்ட 424 சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகளை சென்னை மாநகர காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் இன்று திறந்துவைத்தார்.
கண்காணிப்பு கேமராக்கள் செயல்படும் விதம், அது பொருத்தப்பட்டிருக்கும் இடங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தனியார் மற்றும் அரசின் கூட்டணியில், சென்னையின் முக்கிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
0 Comments