Loading . . .




சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா ரூ.5 கோடியில் மேம்படுத்த ஆய்வு.

The Forecast 2 years ago சென்னை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில்  சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவை ரூ.5 கோடி மதிப்பீட்டில் பூங்கா, சுற்றுச்சுவர், பார்வையாளர் மாடம், பயிற்சி ஆடுகளம் மற்றும் விளையாட்டு அரங்கம் போன்ற வசதிகளுடன் மேம்படுத்துவது தொடர்பாக  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரமான பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப., அவர்கள், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா இ.ஆ.ப., அவர்கள், முதன்மை செயல் அலுவலர்  கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் .சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., அவர்கள், தேனாம்பேட்டை மண்டலக் குழுத்தலைவர் .மதன் மோகன் அவர்கள், சி.எம்.டி.ஏ தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ். ருத்ரமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

சென்னை Relateted News