சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 23-ம் தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,81,503 பயணிகள் பயணம்
The Forecast 2 years ago சென்னை
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த 23-ம் தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,81,503 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.
இந்நிலையில், 23.06.2023 அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,81,503 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 23,745 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,935 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,938 பயணிகளும் பயணம் செய்துள்ளனர்.
அந்த வகையில், ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 13.01.2023 அன்று 2,65,847 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 10.02.2023 அன்று 2,61,688 பயணிகளும், மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 28.04.2023 அன்று 2,58,671 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 13.01.2023 அன்று 2,68,680 பயணிகளும், மே மாதத்தில் அதிகபட்சமாக 24.05.2023 அன்று 2,64,974 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
0 Comments