Loading . . .




காளானில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வேளாண் பல்கலைக்கழகத்தில்

The Forecast 2 years ago வணிக செய்திகள்

 கோவை, ஜூலை 10: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 12,13 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இப்பயிற்சி பல்கலையில் உள்ள அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில், முருங்கையில் முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ் ஆகியவையும், காளானில் காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், பிழிதல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் ரூ.1,770 ஆகும்.

0 Comments

Post your comment here

வணிக செய்திகள் Relateted News