Loading . . .




டிஜிபி சங்கர் ஜிவால் : ரவுடிகளை ஒடுக்க தீவிரம்.

The Forecast 2 years ago காவல் துறை

டிஜிபி சங்கர் ஜிவால் : ரவுடிகளை ஒடுக்க தீவிரம்.


தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்து, காயமடைந்த உதவி ஆய்வாளர் சிவகுருநாதனிடம் நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் டிஜிபி கூறியதாவது:


கூடுவாஞ்சேரி போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்குரிய வகையில் வந்த வாகனத்தை நிறுத்தி விசாரிக்க முற்பட்டுள்ளனர். அப்போது, உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளரை, காரில் வந்தவர்கள் தாக்கியுள்ளனர். அவர்கள் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

உதவி ஆய்வாளர் தற்போது நலமாக உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தேன் தப்பிச் சென்ற 2 பேர் மீதும் கொலை வழக்குகள் உள்ளன. அவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கை தொடரும்.

0 Comments

Post your comment here

காவல் துறை Relateted News