பொதுப்பாடத் திட்டத்தை மாற்ற
உயர்கல்வித் துறைக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக உயர்கல்வித் துறை
அமைச்சர் க.பொன்முடி கூறினார். தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொதுப்பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, சென்னையில் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரி முதல்வர்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஒரு சில கல்லூரிகள் பொதுப்பாடத் திட்டத்துக்கு எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்; அதேவேளையில் பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியது: தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பொதுப்பாடத் திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக அவற்றின் முதல்வர்களை அழைத்தோம். அடுத்த கல்வியாண்டு பொதுப்பாடத் திட்டத்தை அமல்படுத்துவதாக கல்லூரி முதல்வர்கள் உறுதி அளித்துள்ளனர்.
இந்தத் திட்டம் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தப் பாடத் திட்டத்தால் எந்தப் பிரச்னையும் இல்லை; பொதுப்பாடத்திட்டத்தை மாற்ற உயர்கல்வித் துறைக்கு அதிகாரம் உள்ளது.கூட்டத்தில் ஒரு சில கல்லூரிகளின் முதல்வர்கள் தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசினர். அதில் உள்ள நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்ளலாம். இருப்பினும், தமிழகத்தில் விரைவில் மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். கல்வியாளர்களின் கருத்துக்களைக் கேட்காமல் பொதுப்பாடத் திட்டத்தைக் கொண்டுவந்ததாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார். 900 கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் ஆகியோரின் கருத்துகள் அடிப்படையிலேயே பொதுப்பாடத் திட்டம்கொண்டு வரப்பட்டுள்ளது. பொறியியல் சேர்க்கை: பொறியியல் சேர்க்கையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.
தரவரிசைப் பட்டியலில் முதல் 22 ஆயிரம் இடங்களைப் பிடித்திருந்த மாணவர்கள் முதல் சுற்றில் பங்கேற்றனர். அவர்களில் 16 ஆயிரத்து 516 பேர் பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்துள்ளனர்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 1,019 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர் என்றார் அவர். கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சம் இடங்கள் நிரம்பின இது குறித்து அமைச்சர் பொன்முடி கூறியது: தமிழகத்தில் 164
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 11ஆயிரத்து 300 இடங்கள் உள்ளன.அவற்றில், நிகழ் கல்வியாண்டில்ஒரு லட்சத்து ஆயிரத்து 416 இடங்கள்நிரம்பியுள்ளன. மீதம் உள்ளஇடங்களை நிரப்ப நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.புதுமைப் பெண் திட்டத்தின் கீழ்27 ஆயிரத்து 608 பேர் பயனடையஉள்ளனர். இந்த மாணவிகளுக்குமாதம் ரூ.1,000 ஊக்கத் தொகைவழங்கப்படும். ஒட்டுமொத்தமாகஇதுவரை 3 லட்சத்து 10 ஆயிரம்மாணவிகளுக்கு புதுமைப் பெண்திட்டத்தின் கீழ் உதவித் தொகைவழங்கப்பட்டு வருகிறது என்றார்அவர்.
0 Comments