நீட்' தேர்வுக்கு அதிகமாக விண்ணப்பித்ததில் தமிழ்நாட்டுக்கு 3-வது இடம்..!!
The Forecast 2 years ago தேசிய செய்திகள்
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 7-ந் தேதி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 499 நகரங்களில் 4 ஆயிரத்து 97 மையங்களில் நடந்தது. தேசிய தேர்வு முகமை இத்தேர்வை நடத்தியது.
இதுதொடர்பான புதிய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை இத்தேர்வை எழுதிய மாணவர்களில் அதிகம் பேர் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் ஆவர். இந்த ஆண்டு, 5 லட்சத்து 51 ஆயிரத்துக்கு மேற்பட்ட சி.பி.எஸ்.இ. மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.
மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களிடையே மராட்டிய மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான் அதிகம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரம். தொடர்ந்து 5 ஆண்டுகளாக அவர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.
அதையடுத்து, கர்நாடக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 3-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அடுத்ததாக, உத்தரபிரதேச மாநில பாடத்திட்டத்தில் படித்த 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். கேரளா, பீகார் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
0 Comments