Loading . . .




சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்குவோம்" - மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்

The Forecast 2 years ago தேசிய செய்திகள்

சென்னை தேனாம்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில் 'சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்' என்று பேசினார். இந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் சனாதனம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்க வேண்டும்; கண்ணை நோண்ட வேண்டும். சனாதனத்திற்கு எதிராக பேசும் யாரும் அரசியல் அதிகாரம் அந்தஸ்த்தை தக்கவைக்க முடியாது. நமது முன்னோர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சனாதன தர்மத்தைப் பாதுகாத்தனர். சனாதனத்தை ஒழிப்பதாக பேசுபவர்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்" என்று கூறினார்.

0 Comments

Post your comment here

தேசிய செய்திகள் Relateted News