முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு
The Forecast 2 years ago அரசு செய்திகள்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் நலனை அரசு தொடர்ந்துபாதுகாத்து வருகிறது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்போதே, உடனுக்குடன் தமிழக அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தியது. தற்போது42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதாவது ,ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 4 சதவீதம்என்ற விகிதத்தில் மாதம் குறைந்தபட்சம் ரூ.600 முதல் அதிகபட்சம் ரூ.9,000 வரையும், ஓய்வூதியர்களுக்கு ரூ.360 முதல் ரூ.5,000 வரையும் உயர்வு இருக்கும். இந்நிலையில், அகவிலைப்படி உயர்வு அறிவித்ததற்காக, முதல்வருக்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
0 Comments