தமிழ்நாடு தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
The Forecast 2 years ago அரசு செய்திகள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, இ.ஆ.ப., தடய அறிவியல் துறை இயக்குநர் எல். விஜயலதா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 29 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 6 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, இ.ஆ.ப., தடய அறிவியல் துறை இயக்குநர் எல். விஜயலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments